திட உணவு கொடுத்து ஒரு மாதம் ஆகியிருக்கும். இப்போது இந்த குழந்தைகள் சிம்பிளான ப்யூரிலிருந்து கலவையான உணவுகளுக்கு மாறப் போகிறார்கள். சில குழந்தைகளுக்கு முதல் பல்லும் வர தொடங்கியிருக்கும். பசியும் அதிகமாக எடுக்கும். 7 மாத குழந்தைகளுக்கு என்னென்ன உணவு (Food Chart for 7 month Babies) தரலாம் எனப் பார்க்கலாமா…
7 மாத குழந்தைகளுக்கான டிப்ஸ்
- தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருங்கள். நிறுத்த வேண்டாம்.
- 7-வது மாதம் தொடங்கிய உடனே, தாய்ப்பாலுடன் ஒரு நாளைக்கு 3 முறை உணவுக் கொடுக்கத் தொடங்குங்கள்.
- காலை 9, மதியம் 12, மாலை 6 மணிக்கு உணவைக் கொடுக்கலாம். இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் தரவேண்டும்.
- குழந்தையை சாப்பிட உட்கார வைக்கும்போது நேராக உட்கார பழக்குங்கள்.
- முன்பு சொன்னது போல ஒரு உணவைக் கொடுத்து பழக்கிவிட்டு 3 நாள் வரை காத்திருந்து அலர்ஜி ஏற்படுகிறதா இல்லையா எனக் கவனித்த பின்பு மீண்டும் அந்த உணவை செய்து கொடுக்கலாம்.
- சில உணவுகள் குழந்தைக்கு ஒத்து கொள்ளாது எனவே இந்த 3 நாள் விதியைப் பின்பற்றினால் குழந்தையை அலர்ஜி, வயிற்று கோளாறிலிருந்து காக்கலாம்.
- 3 வேளை உணவுக் கொடுத்தாலும், குழந்தைக்கு பசி வரும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கலாம்.
- குழந்தைக்கு கொடுக்கும் உணவு நன்றாக வெந்திருக்கிறதா, மிருதுவாக இருக்கிறதா எனப் பரிசோதித்து கொள்ளுங்கள்.
- நீங்கள் திட உணவுக் கொடுக்க தொடங்கியவுடன், குழந்தை மலம் கழித்தால் துர்நாற்றம் அடிக்கலாம். இதைக் கண்டு பயம் கொள்ள தேவையில்லை. இது நார்மல்தான்.
ஆப்பிள் மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு ப்யூரி
Image Source: Attracting Wellness
தேவையானவை
- தோல் உரித்து நறுக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு – 1
- தோல் உரித்து நறுக்கிய ஆப்பிள் – 1
செய்முறை
- ஒரு பானில் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
- அதில் ஆப்பிள், சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்க்கவும்.
- மிதமான தீயில் வேகவிடுங்கள்.
- ஆப்பிளும் சர்க்கரைவள்ளி கிழங்கும் வெந்ததும் அடுப்பை நிறுத்திவிடுங்கள்.
- மிக்ஸியில் இவற்றைப் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
குறிப்பு
இதே முறையில் உங்கள் குழந்தைக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொடுக்கலாம். கேரட்டும் பட்டாணியும் நல்ல காம்பினேஷன் உணவு.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்
வாழைப்பழம் மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு கூழ்
Image Source : Jan’s Sushi Bar
தேவையானவை
- தோல் உரித்து நறுக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு – 1
- வாழைப்பழம் – 1
- தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் – 1 கப்
- நெய் – 2-3 துளிகள்
செய்முறை
- ஒரு பானில் தேவையான பால் ஊற்றவும்.
- அதில் சர்க்கரைவள்ளி கிழங்கை போட்டு வேகவிட வேண்டும்.
- சர்க்கரைவள்ளி கிழங்கு வெந்ததும் அதில் வாழைப்பழத்தை நறுக்கி சேர்க்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, இரண்டையும் நன்றாக கலந்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
- இதை பாலுடன் சேர்த்து ஒரு பவுலில் மாற்றி, ஃபோர்க் மூலமாக இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- கூழ் போல மாறியவுடன் நெய் சேர்த்து கலக்கி குழந்தைக்கு ஊட்டலாம்.
- சத்தான, சுவையான உணவு இது.
ப்ளெயின் நெய் சாதம்
Image Source : Free Images
தேவையானவை
- அரிசி – ½ கப்
- தண்ணீர் – 2 கப்
- நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
- அரிசியை நன்றாக கழுவி கொள்ளுங்கள்.
- பிரஷர் குக்கரில், தண்ணீரும் அரிசியும் சேர்த்து வேக வைக்கவும்.
- 5 விசில் வந்ததும் நிறுத்தி விடவும்.
- வெந்த சாதத்தை ஒரு பவுலில் மாற்றி அதில் நெய் சேர்த்து நன்கு கூழாக்கி கொள்ளவும்.
- இதைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.
- கேரளா நேந்திர பழப் பொடி கஞ்சி
- உடலுக்கு ஆரோக்கியத்தைத் தர கூடியது. உடல் எடையை அதிகரிக்கும். இந்தப் பொடியை எப்படித் தயாரிப்பது, எப்படி இதன் மூலம் ரெசிபி செய்வது என இந்த லின்கில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?
பிளெயின் கிச்சடி
Image Source : Yummy Tummy
தேவையானவை
- அரிசி – ⅔ கப்
- பாசி பருப்பு – ⅓ கப்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை
- அரிசியையும் பருப்பையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- நெய்யை தவிர அனைத்தையும் பிரஷர் குக்கரில் போட்டு வேக விடவும்.
- 3 விசில் வந்ததும் நிறுத்தி விடுங்கள்.
- பிரஷர் நீங்கியதும், நெய் சேர்த்து கலக்கவும்.
- நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்கவும்.
ஹோம்மேட் செர்லாக்
குழந்தைக்கு நீங்களே ஹோம்மேட் செர்லாக் (சத்து மாவு) செய்து தரலாம். அதை எப்படி செய்வது என இந்த லின்கை பார்க்கவும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?
சத்து மாவு குழந்தைக்கு மிக சிறந்த ஊட்டச்சத்து உணவு. குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க வல்லது.
ரவா உப்புமா
Image Source: pixabay
தேவையானவை
- ரவா – 2 டேபிள் ஸ்பூன்
- வெந்நீர் – 1 கப்
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- கடுகு – ½ டீஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
- பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை
- பானில் நெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு இதில் சூடான வெந்நீர் ஊற்றவும்.
- ரவாவை மெதுவாக சேர்த்து கலக்கவும். கட்டிகள் இல்லாமல் இருக்க கலந்து கொண்டே இருக்கவும்.
- அதில் மஞ்சள் தூளும் பெருங்காயமும் சேர்க்கவும்.
- மூடி போட்டு, 5 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, இளஞ்சூடாக குழந்தைக்கு தரலாம்.
இதையும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை
ராகி கூழ்
Image Source: Yummy tummy
தேவையானவை
- ராகி (கேழ்வரகு மாவு) – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
- டேட்ஸ் ப்யூரி – 1 டீஸ்பூன்
செய்முறை
- கேழ்வரகை நன்கு கழுவி, அலசி, ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
- தண்ணீரை வடித்து, உலர்த்தி வெள்ளை துணியில் வெயிலில் கேழ்வரகை காயை வைக்கவும்.
- ஒரு பானை எடுத்து, அதில் ராகியை போட்டு வறுத்துக்கொள்ளவும். மிதமான தீயில் வைக்கவும்.
- சூடு ஆறியதும், வறுத்த கேழ்வரகை மெஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும்.
- சுத்தமான, காற்று புகாத டப்பாவில் இதைப் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பானில் தண்ணீர் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ராகி மாவை சேர்க்கவும்.
- இந்த கூழ் நன்கு திக்காகும் வரை வேக விடவும். இதில் 1 டீஸ்பூன் டேட்ஸ் ப்யூரி கலந்து விடவும்.
- ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம்.
- இளஞ்சூடாக குழந்தைக்கு கொடுக்கலாம்.
இந்த சமயத்தில்தான் குழந்தைக்கு முதல் பல் முளைக்கும். பசி எடுப்பது, நாக்கை சுழற்றுவது, எதையாவது எடுத்து கடிப்பது போன்றவற்றை செய்வார்கள். சில குழந்தைகளுக்கு நீங்கள் தரும் உணவு பிடிக்காது. அதனால் உணவுக் கொடுப்பதை நிறுத்தி விடாதீர்கள். வேறு சுவையில், வேறு முறையில் செய்து கொடுக்கலாம்.
இதையும் படிக்க: 8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை