குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி?

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. குழந்தையின் திறனை அறிந்து, அதற்கு ஏற்றதுபோல நடவடிக்கை எடுக்க வேண்டும். எதையும் தொடக்கத்தில் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை செய்து இயல்பு நிலையை அடைய உதவும்.

அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தெரிகிறதா? செக் செய்து கொள்ளுங்கள்…

பிறந்தது முதல் 3 மாதங்கள் வரை

திடீரென சத்தம் கேட்டால் குழந்தை பயப்படும்.

தூங்கி கொண்டிருக்கும் அறையில், யாராவது பேசினால் குழந்தை, பேச்சு சத்தம் கேட்டு கண் விழித்துக்கொள்ளும்.

பசி, வலி எனக் குழந்தைக்கு ஏற்பட்டால் வித்தியாசமாக அழத் தொடங்கும்.

அழுது கொண்டிருக்கும் குழந்தை, தாயோ தனக்கு தெரிந்தவரின் குரல் கேட்டோ அழுவதை நிறுத்திக் கொள்ளும்.

இதையும் படிக்க: முதல் மாத குழந்தையைப் பராமரிக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

3-6 மாதங்கள் வரை

எங்கு சத்தம் வருகிறதோ அங்கே குழந்தை திரும்பி பார்த்து உற்று நோக்கும்.

குழந்தையிடம் யார் பேசுகிறாரோ அவரையே அப்படியே பார்த்து, ஆ, ஊ என சத்தம் போடும்.

தனக்கு தெரிந்த முகங்கள் பேசினால் ஏதாவது சத்தம் எழுப்பி கவனத்தை ஈர்க்கும்.

இதையும் படிக்க: குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்… மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் 

6-9 மாதங்கள் வரை

பொம்மைகளிலிருந்து வரும் சத்தத்தை விரும்பி கேட்கும்.

குழந்தைகள் தானாகவே, பல சத்தங்களை எழுப்பி கொண்டிருக்கும்.

ராகம் இழுத்துகூட சத்தம் போட்டுகொண்டு இருக்கும்.

மா, ப்பா போன்ற சின்ன சின்ன வார்த்தைகளை குழந்தைகள் பேசும்.

9-12 மாதங்கள் வரை

எளிமையாக உச்சரிக்க கூடிய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும்.

டாட்டா, பை பை, அம்மா வா போன்ற எளிமையான சொற்கள் குழந்தைக்கு புரியும்.

பெரியவர்கள் பேசுவதை தானும் பேச வேண்டும் எனக் குழந்தைகள் நினைக்கும்.

12 – 15 மாதங்கள் வரை

தன் முதல் சொல்லை பேசத் தொடங்கும்.

மாமா, பாப்பா போன்ற சொற்களை சொல்லும்.

தனக்கு தானே எதாவது பேசி கொண்டு, கத்திக் கொண்டு இருக்கும்.

6-8 சொற்களாவது குழந்தை பேச ஆரம்பித்துவிடும்.

இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார் … ஏன்?

15 – 20 மாதங்கள் வரை

எளிமையான சொற்கள் அனைத்தையும் குழந்தை புரிந்து கொள்ளும்.

பசி, வலி, தேவைகள், மகிழ்ச்சி போன்றவற்றை சொற்கள் மூலம் சொல்ல பழகும்.

விலங்குகள் போல, பறவைகள் போல தானும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

சின்ன சின்ன வாக்கியங்களை குழந்தைகள் பேசும். அம்மா வா, தண்ணீர் வேண்டும் இப்படி பேசும்.

இதையும் படிக்க: குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

20 – 30 மாதங்கள் வரை

மற்றவர்கள் பேசும் வார்த்தைகள் பெரும்பாலானவற்றை தானே விரைவிலே குழந்தைகள் புரிந்து கொள்ளும்.

வீட்டில் உள்ளவையோ வெளியில் பார்ப்பவற்றையோ பழகியவற்றையோ பெயர் சொல்லி பழகும்.

உட்காரு, சாப்பிடு, ஓடாதே போன்றவற்றைப் புரிந்து கொள்ளும்.

100 வார்த்தைகளாவது குழந்தைகள் அறிந்து இருக்கும்.

இந்த வளர்ச்சி நிலைகளை உங்கள் குழந்தையுடன் ஒப்பிட்டு பாருங்கள். மாறுதல்கள் ஏதேனும் இருந்தால், தங்கள் குழந்தையின் காது கேட்கும் திறனைப் பரிசோதிக்க மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

இதையும் படிக்க: உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? இதோ சில அறிகுறிகள்…

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…