ஜிங்க் எனப்படும் துத்தநாகம் மற்றும் புரோட்டீன் சத்து கர்ப்பிணிக்கு அவசியமா?

ஜிங்க் எனப்படும் துத்தநாகம் மற்றும் புரோட்டீன் சத்து கர்ப்பிணிக்கு அவசியமா?

• திருமணமான ஆண்களுக்கு போதிய அளவில் ஜிங்க் சத்து நிறைந்த உணவுகள் கொடுத்துவந்தால் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், குழந்தை பிறப்புக்கு உதவிபுரியும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் ஜிங்க் செயலாற்றுகிறது.

• ஜிங்க் மற்றும் புரோட்டீன் சத்து குறைபாடு ஏற்படுவது கர்ப்பிணிகளுக்கும் சிசுவின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

• போதிய தாய்ப்பால் சுரப்புக்கும், உடல் உறுதியுடன் திகழ்வதற்கும் ஜிங்க் மினரல் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் பயன்படுகின்றன.

• வேர்க்கடலை, எள், பூண்டு, காளான், காராமணி, முட்டையின் மஞ்சள் கரு, கடல் சிப்பிகளில் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து அதிகளவில் இருக்கிறது.

அனைத்துவகையான பயிறு மற்றும் தானிய வகைகளில் போதுமான அளவு புரோட்டீன் சத்து கிடைக்கிறது. உணவுகளில் இருந்து கிடைக்கும் புரோட்டீனே கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் போதுமானது. எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் ஆலோசனையின்றி புரோட்டீன் பவுடர்களை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்