உலகிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியல்! முதல் இடத்தில் இந்தியாவின் குர்கான்!

உலகிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியல்! முதல் இடத்தில் இந்தியாவின் குர்கான்!

 உலகிலேயே காற்று மாசு நிறைந்த நகரம் என்ற பெயரை குர்கான் பெற்றுள்ளது.
ஐக்யூஏர் ஏர்விஸ்வல் மற்றும் க்ரீன்பீஸ் ஆகியவை இணைந்து, இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளன. அதில், தேசிய தலைநகர்ப்பகுதியில் அமைந்துள்ள குர்கான் உலகிலேயே அதிக மாசு நிறைந்த நகரம் என 
தெரியவந்துள்ளது. 
உலகிலேயே அதிக மாசு நிறைந்த 20 நகரங்கள் இந்த ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலான நகரங்கள் ஆசிய நாடுகளில்தான் அமைந்துள்ளன. அதிகபட்சமாக, இந்தியாவில் மட்டும் 7 நகரங்கள் அதிக மாசு நிறைந்தவையாக உள்ளன. அவற்றில், குர்கான் முதலிடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, காசியபாத், ஃபரிதாபாத், பிவாடி, நொய்டா, பாட்னா, லக்னோ உள்ளிட்ட நகரங்கள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
இதற்கடுத்து 8வது இடத்தில், சீனாவின் ஹோட்டன் நகரம் உள்ளது. 9 மற்றும் 10வது இடத்தில் பாகிஸ்தானின் லாகூர், ஃபைசலாபாத் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில், டெல்லி 11வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்