தொட்டியில்
இருக்கும் நீர்
36 டிகிரி செல்சியஸ்
உஷ்ணத்துடன் தொடர்ந்து
இருக்கவேண்டும், இது தாயின் கருவறையில் உள்ள வெப்பநிலைக்கு சமமாகும். வெந்நீர் காரணமாக கர்ப்பிணியின் ரத்தவோட்டம் சுறுசுறுப்படைந்து, தாயின் கருப்பை தசைகள் விரிவடைகிறது.
தண்ணீர் தொட்டியில் அமர்ந்திருக்கும்போது கர்ப்பிணி பதட்டமின்றியும் அதிக வலியின்றியும் பிரசவத்தை எதிர்கொள்ள முடியும். பொதுவாக தண்ணீர் தொட்டி பிரசவம் இரண்டு மணி முதல் மூன்று மணி நேரத்திற்குள் முடிவடைவதாக இருக்கிறது.
நமது நாட்டில் இன்னமும் தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து குளிக்கும் பழக்கமே இன்னமும் விரிவடையவில்லை என்பதால் இந்த வகையான பிரசவத்திற்கு பெண் தயாராவது மிகவும் கடினம். அதனால் இந்தியாவில் பொதுவாக இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.