பெரும்பாலான பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. அதனால் இது அதிகாலை சுறுசுறுப்புக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. வாய் துர்நாற்றம், ஈறு நோய்களால் அவதிப்படுபவர்கள் வாயில் கிராம்பு அடக்கிக்கொள்வது நல்லமுறையில் பயனளிக்கிறது.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பு சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை பிரச்னை சரியாகும். தசை பிடிப்புகளால் அவதிப்படுபவர்கள் கிராம்பு எண்ணெய் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.