· கர்ப்ப காலத்தில் மருந்து சாப்பிடுவது விரும்பத்தக்கது அல்ல என்றாலும் சிறுநீர்த் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
· மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த சிக்கலும் ஏற்படாது.
· ஏழு நாட்களில் சிறுநீர்த் தொற்று குணமாகவில்லை என்றால் அல்லது சிக்கல் அதிகரிப்பது தெரிந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் வேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
· குணமாகிவிட்டாலும், சிறுநீர் பரிசோதனை செய்து தொற்று முழுமையாக போய்விட்டதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
சிறுநீர்த் தொற்றுக்கு பல்வேறு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் இருக்கின்றன. கர்ப்பிணிக்கு எது தேவை என்பதை மருத்துவர்தான் முடிவு செய்யவேண்டும். கர்ப்பகாலம் முழுவதும் அவ்வப்போது சிறுநீர் பரிசோதனை செய்து தொற்று பாதிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது நல்லது.