• குறிப்பாக உடல் எடையை கொஞ்சம்கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு இரண்டு கிலோ எடை குறைந்தாலே நல்ல முயற்சி.
• நடை பயிற்சி, ஜாகிங், நீச்சல், யோகா போன்றவை நல்ல பயிற்சிகளாக இருக்கும். உடற் பயிற்சி கூடத்தில் சென்று பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்வதாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரின் அனுமதி பெறவேண்டும்.
• பயிற்சி செய்வதால் உடலுக்குத் தேவையான அளவுக்கு பழங்கள், காய்கள், தானியங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
• ஒரு டைரி எடுத்துக்கொண்டு தினமும் செய்யும் பயிற்சியையும் எடையையும் குறித்துகொண்டே வருவது நல்லபடியாக பலன் கொடுக்கிறது.
உடற்பயிற்சி செய்துவிட்டு குழந்தைக்கு பால் கொடுத்தால் சுவை மாறிவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அது ஓரளவு உண்மைதான். அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பால் கொடுக்கவேண்டும். அல்லது பயிற்சி முடிந்து அரை மணி நேரம் கழித்து பால் கொடுக்க வேண்டும்.