• 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தக் காரணத்தினாலும் மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் கொடுக்கக்கூடாது.
• தேவைக்கு அதிகமான மருந்துகள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டால் அதிக உறக்கம், வயிற்றுப் பொருமல், தோலில் தடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
• மூலிகைகள் எல்லாமே நல்லது என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் சில மூலிகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
• நோய் அதிகரிக்கும்போது, பெற்றோரே மாத்திரை அளவுகளை அதிகப்படுத்தி கொடுக்கக்கூடாது.
மருத்துவர் ஆலோசனையில் கொடுக்கப்படும் மருந்துகளும் சரியான நேரத்தில் சரியான அளவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். மேலும் மருந்துகள் காலாவதியாகவில்லை என்பதை தெளிவாக அறிந்துகொண்ட பிறகே கொடுக்கவேண்டும்.