இரவில் மொபைல் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

இரவில் மொபைல் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி அலைகள் நமது உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த மெலடோனின் தான் நாம் சீராக தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இதனால் தொடர்ந்து இரவு நேரங்களில் மொபைல் போன் பார்ப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். 

மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டது. இது கண்களில் வெகு நேரம் படும் போது கண்களில் உள்ள ரெட்டினா பகுதியை பாதிப்படையச் செய்கிறது. மொபைல் போனிலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளி விழித்திரைக்கு சேதத்தை ஏற்படுத்தி மாக்குலார் சிதைவை உண்டாக்கி பார்வை குறைபாட்டை உண்டு பண்ணுகிறது.

இந்த நீல நிற ஒளிகள் தூக்கமின்மை பிரச்சனை, கண் பார்வை குறைபாடு இவற்றை ஏற்படுத்தும் போது தானாகவே நீங்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறீர்கள். போதிய தூக்கம் இல்லாததால் பகல் நேரங்களில் சோர்வு, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மன ரீதியாக பலவீனமும் அடைகிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சில வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடைய மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுவதால், செல்போன்கள் மனிதர்களுக்கு புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. செல்போன் நீல நிற ஒளியை வெகு நேரம் பார்ப்பது மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இந்த செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சுகள் மூளையை பாதிக்கின்றன. இரவில் சரிவர தூங்காமல் இருப்பது உங்கள் மூளை செயல்பாட்டை குறைக்கும், பகல் நேரங்களில் தெளிவாக சிந்திக்க முடியாது. நினைவுபடுத்த முடியாது. நினைவாற்றல் தடுமாறும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்