சூரிய ஒளியால் முகத்தில் ஏற்படும் கருமைக்கு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் இரண்டு டீஸ்பூன் தேனை கலந்து பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடவி ஐந்து நிமிடங்கள் ஊறவையுங்கள். பின்னர் லேசான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தை நன்கு கழுவுங்கள். இது உங்கள் நிறமியைக் குறைக்க உதவும், மேலும் இது இயற்கையான பிரகாசத்தை உங்களுக்கு வழங்கும்.
வாழைப்பழங்கள் உங்கள் முகத்திற்கு ஒரு சிறந்த வேலை செய்கின்றன. வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் பாலுடன் கலந்து பிசைந்து கொள்ளவும். பின்னர், அந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை மசாஜ் செய்யவும். பின்னர் முகத்தை கழுவி விடவேண்டும். இப்போது நீங்கள் மிகவும் விரும்பிய பளபளப்பான சருமத்தை பெறலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் கருமையான இடங்களிலும் வேலை செய்கிறது.
சருமத்திற்கு கூடுதல் பிரகாசத்தை தரும் மற்றொரு இயற்கை வழி வெள்ளரி. ஒரு வெள்ளரிக்காயை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இந்த ப்யூரியை ஒரு பருத்தி துணியால் வடிகட்டி, சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த சாறை ஒரு பாட்டில் ஊற்றி அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். சிறிய காட்டன் பேட்டைப் பயன்படுத்தி இந்த பேஸ்ட்டை உங்கள் முழு முகத்திலும் தடவவும். இதன் விளைவாக கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.