உயரமா வளர ஆசையா… சோயா சாப்பிடுங்க!

உயரமா வளர ஆசையா… சோயா சாப்பிடுங்க!

உடல் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அத்தியாவசியமானதாகும். குறிப்பாக அழிந்த திசுக்களுக்குப்
பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும், புதிய திசுக்களை கட்டமைக்கவும் புரதம் தேவைப்படுகிறது.
வேறு எந்த பருப்பு, பயிறு வகைகளை விடவும் சோயா பீன்ஸில் அதிக அளவு புரதம் நிரம்பியிருக்கிறது.
இதுதவிர தயாமின், நியாசின், ரைபோஃப்ளவின், 
கொழுப்பு, நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி போன்ற சத்துக்களும்
காணப்படுகின்றன.

  • பெண்களின் ஈஸ்ட்ரோஜன்
    ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதற்கு சோயா பீன்ஸ் உதவி செய்வதால், இதனை பெண்களுக்கான
    சிறந்த உணவு என்று சொல்லமுடியும்.
  • மெனோபஸ் நேரங்களில்
    பெண்களின் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது சோயா. மேலும் மெனோபஸ் காலத்தில்
    பெண்களை தாக்கும் எலும்பு நோய்களில் இருந்தும் விடுதலை தருகிறதுசோயா.
  • கால்சியம் மற்றும்
    இரும்புச் சத்துக்கள் நிரம்பியிருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும்
    அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.
  • சோயாவில் நார்ச்சத்து
    நிரம்பியிருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • கெட்ட கொலஸ்ட்ரால்
    எனப்படும் எல்.டி.எல். அளவை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் ஹெச்.டி.எல்.
    அளவை கூட்டவும் செய்கிறது சோயா.
  • கார்போ ஹைட்ரேட் சோயாவில்
    குறைவாக இருப்பதால், எடை குறைய விரும்புபவர்களுக்கு விருப்ப உணவாக இருக்கிறது.
  • குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
    சோயா தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தால், அவர்கள் உயரம், எடை கூடுவதுடன் ரத்தத்தில்
    ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
  • கால்சியம், மக்னீசியம்
    சத்துக்கள் சோயாவில் இருப்பதால் பற்கள் எலும்புகள் உறுதி அடைகின்றன.
  • யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும்
    தன்மை சோயாவுக்கு இருப்பதால் மூட்டு வலியை கட்டுப்படுத்துகிறது.

ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு அதிகம் உதவி செய்கிறது என்பதால், ஆண்கள் அதிக அளவு சோயாவை
எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும் சோயாவை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்