வெந்நீர் மருத்துவம் நம் நாட்டில் சித்தர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது.
தண்ணீர் மூலம் பரவும் காலரா, டைபாய்டு, ஹெபபடைடிஸ் போன்ற நோய்களை உருவாக்கும் கிருமிகளை
தடுக்கிறது வெந்நீர். காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் ஏற்படும் நேரத்தில் மட்டும்
வெந்நீர் குடிப்பது சிலரது வழக்கம். முழு நேரமும் வெந்நீர் குடிப்பதற்கு பிடிக்கவில்லை
என்றாலும் காலை மட்டுமாவது வெந்நீர் குடிக்க வேண்டும். வெந்நீர் குடிப்பதால் ஏற்படும்
மருத்துவ நன்மைகளை பார்க்கலாம்.

- தினமும் காலையில் வெந்நீர்
அருந்தினால், அன்றைய தினம் முழுவதும் செரிமான மண்டலம் சிறப்பாக பணியாற்றும். அதனால்
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் மிகச்சிறந்த மருந்து. - வயிற்றுவலி, உப்புசம்,
அஜீரணம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கும் வெந்நீர் சிறந்த வகையில் உதவுகிறது. - வெந்நீர் அருந்துவதால்
ரத்தக்குழாய்கள் விரிவடைந்து, ரத்தவோட்டம் சுறுசுறுப்படைகிறது. மேலும் உடலில்
இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்துபோகிறது. இதனால் உடல் செல்களுக்குத் தேவையான
ஊட்டச்சத்து, ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கிறது. - வெந்நீர் பருகுவதால்
உடலில் உள்ள நஞ்சுகள் அகற்றப்பட்டு, மெட்டபாலிசம் அதிகரித்து உடல் சிறப்பான முறையில்
இயங்கத்தொடங்குகிறது. - தினமும் வெந்நீர் குடித்துவந்தால்
தோல் பளபளப்படையும்.உடல் எடையை குறைக்க
விரும்புபவர்கள் தினமும் வெந்நீர் பருகிவந்தால் நல்ல பலன் கிடைக்கும். சாப்பிடுவதற்கு
முன்பு வெந்நீர் குடித்தால் பசி மட்டுப்படும் என்பதால் குறைவாக சாப்பிட்டு உடல்
எடையை குறைக்க முடியும். - வெந்நீரில் உப்பு போட்டு
கரைத்து தொண்டையில் படுமாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொற்று, டான்சில் தொந்தரவு
போன்றவைகளில் இருந்து ஆறுதல் கிடைக்கும். - கால் பாதங்கள் வலிக்கும்போது
வாளி அல்லது பாத்திரத்தில் வெந்நீரும் உப்பும் போட்டு ஊறவைத்தால், கால் வலி காணாமல்
போய்விடும்.
சுத்திகரிப்பு செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர், நல்ல நிறுவனத்தின் தயாரிப்பு
என்றாலும், தண்ணீரை காய்ச்சிக் குடிப்பது மட்டும்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது.