உங்கள் கண்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்! எப்படி?

உங்கள் கண்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்! எப்படி?

அரைமணி நேரம் புத்தகம் வாசித்த பிறகு, கணினி அல்லது தொலைக்காட்சி திரைகளை பார்த்தபிறகு கண்கள் எப்படி இருக்கின்றன என கவனித்துப் பாருங்கள். கண்களில் வலி அல்லது சோர்வு ஏற்பட்டால், புத்தகம் வாசிக்கும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது குறித்த இடைவெளி கொடுங்கள். நிறைய நீர் அருந்துவதும் கண் அசதியை போக்கும்.

மூன்று முதல் நான்கு அடி தொலைவில் உள்ள பொருள்களை கவனிக்க தவறுதல் பார்வை குறைபாட்டின் அறிகுறியாகும். தெருவில் சென்று கொண்டிருக்கும்போது தொலைவு காரணமாக சில பொருள்களை தெளிவாக அடையாளங்காண முடியாததை கொண்டு பார்வை மங்கலாகிவிட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய நிலை இது.

ஒரு நாளில் எத்தனை முறை நீங்கள் கண்களை இடுக்கிப் பொருள்களை பார்க்கிறீர்கள் என்று கவனியுங்கள். எதையாவது பார்க்கும்போது கண்களை இடுக்கினால், தெளிவாக பார்ப்பதற்கு கண்கள் முயற்சி செய்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். அனைவருமே சில தருணங்களில் கண்களை இடுக்கிப் பார்ப்பர். ஆனால், அடிக்கடி கண்களை இடுக்கிப் பார்த்தால் பார்வையில் குறைபாடு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். பார்வை குறைபாட்டின் மத்தியில் தெளிவாக பார்ப்பதற்காககே கண்களை இடுக்கி உற்றுப் பார்க்கிறோம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்