மகிழ்ச்சியான செய்தி! கொட்டப் போகுது மழை! தெறித்து ஓடப் போகுது வெயில்!

மகிழ்ச்சியான செய்தி! கொட்டப் போகுது மழை! தெறித்து ஓடப் போகுது வெயில்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பநிலை மற்றும் அனல் காற்று போன்றவற்றி தாக்கம் இன்று குறைந்து விட்டதாகவும்,மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பகுதிகளில் 4செ.மீ மழையும்,தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 3செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

சென்னை பொருத்த வரை வானம் அதிகம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 34டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!