உள்ளங்கைகளில் இந்த குறைபாடு இருந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை..!

உள்ளங்கைகளில் இந்த குறைபாடு இருந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை..!

முதுமையின் அறிகுறி மட்டுமல்ல உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும்
கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

சிவந்த கைகள் கொண்டிருந்தால் அது உடல் நலக்குறைவுக்கான அறிகுறியாகும். இது போன்ற
சிவந்த உள்ளங்கைகள் கல்லீரல் நோயின் ஆரம்ப காலமாக இருக்கலாம். உடலில் ரத்த சர்க்கரை
குறைபாட்டை ஏற்படுத்தும் ஹார்மோன் சமமின்மை காரணமாக இந்த சிவப்பு தன்மை ஏற்படுகிறது.

நம்மில் சிலருக்கு உள்ளங்கை மட்டும் வியர்த்துக் கொண்டே இருக்கும். அடிக்கடி
கைகுட்டை நனைந்து போகும். யாரிடமும் கை குலுக்க கூச்சமாக இருக்கும். இந்த உள்ளங்கை
வியர்த்தலுக்கு இயற்கையாகவே அதிகமாக சுரக்கும் வியர்வை சுரப்பிகள், அதிக மன அழுத்தம்,
அதிகமாக சுரக்கும் தைராய்டு சுரப்பிகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. உணவில் உப்பின்
அளவை குறைப்பது மற்றும் மது பழக்கத்தை கைவிடுவது, சுவாச பயிற்சி செய்வது ஆகியவற்றின்
மூலம் இந்த வியர்வையை குறைக்க முடியும்.

வறண்ட உள்ளங்கைக்கான காரணமாக கூறப்படுபவை நீரழிவு மற்றும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு
ஆகியவைதான். பெண்களுக்கான மெனோபாஸ் பிரச்சனைகள் இதனோடு உடன் வரும். இதைத் தவிர்க்க
உணவில் மீன் எண்ணெய் சத்துக்கள் மற்றும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை
சேர்த்துக் கொள்ள வேண்டும்

பலவீனமான நகங்கள் மற்றும் விரிசல்கள் உடைய நகங்கள் உடலில் துத்தநாக குறைபாட்டின்
காரணமாக ஏற்படலாம். துத்தநாகம் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. காயங்களை
ஆற்றுவதற்கும், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிப்பதற்கும் துத்தநாகம் உதவி செய்கிறது.
இதனை அதிகரிக்க இறைச்சி மற்றும் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் மற்றும் ஓட்ஸ்
ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.

சிலருக்கு விரல்கள் முருங்கைக்காய்
போல அதன் நுனிகளில் வீங்கி காணப்படும். நகமும் அதனை ஒட்டியுள்ள சதையும் வீங்கி இருக்கும்.
இது போன்று இருந்தால் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். இது இதய
நோய் அல்லது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். ஆகவே உடனடியாக இவர்கள்
மருத்துவரை சந்திப்பது அவசியம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்