கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

• சிறு மணல் போன்று உடல் முழுவதும் தோன்றக்கூடிய வியர்க்குரு அரிப்பு ஏற்படுத்துவதுடன் துர்நாற்றத்தையும் உண்டாக்கும்.

• இது தானாகவே சரியாகக்கூடியது என்றாலும், அரிப்பு ஏற்படும்போது சொரிந்துவிடுவதால், புண்ணாகி மேலும் அவஸ்தையை தரும்.

• பொதுவாக உடைகளால் மூடப்பட்ட இடங்களில்தான் வியர்க்குரு அதிகம் தோன்றுகிறது. காலமைன் லோசன் வியர்க்குருவை அழிப்பதில் சிறந்த முறையில் செயலாற்றுகிறது.

• இந்த நேரத்தில் வியர்வையை உறிஞ்சும் பருத்தித்துணிகளை மட்டுமே அணியவேண்டும். பாலியஸ்டர் துணிகளை தவிர்ப்பதுடன், உடை இறுக்கமாக அணியக்கூடாது.

கோடை காலத்தில் குழந்தைகளை காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலும் தண்ணீர் துணியால் நனைத்தெடுத்தால் வியர்க்குரு தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம். பவுடர்கள் வியர்வை சுரப்பிகளை அடைத்துவிடலாம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!