தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான் – எப்படியெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான் – எப்படியெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..

பொதுவாக தூக்கு மாட்டிக்கொள்தல் மற்றும் விஷம் சாப்பிட்டு மரணம் அடைபவர்களே அதிகம். கிணற்றில் குதித்தல், ரயில் முன் பாய்தல், மாடியில் இருந்து விழுதல் போன்றவை அடுத்த வரிசையில் இருக்கிறது. மிகவும் மனம் வெறுத்தவர்கள்தான் தனக்குத்தானே தீ வைத்துக்கொள்கிறார்கள்.

பொதுவாக  பக்குவப்படாத மனநிலையில் அவசரப்பட்டுத்தான் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாதம், பிறரை பழி வாங்குவதற்கு, தாங்கமுடியாத ஏமாற்றம் போன்றவையும் காரணங்களாக அமைவதுண்டு.

தற்கொலை என்பதும் உடல் நோய் போன்றதுதான். மனதில் ஏற்படும் தாங்கமுடியாத பிரச்னையே தற்கொலையாக வெளிப்படுகிறது. அதனால் மனதில் குழப்பம் ஏற்படும்போது மனதுக்கு நெருக்கமானவரிடம் மனம் விட்டுப் பேச முயற்சிக்க வேண்டும்.

பிரச்னைகளை சமாளிக்க மனதில் உறுதியும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும். இதற்கு நண்பரோ, உறவினரோ, குடும்பநல மருத்துவரோ, மனநல மருத்துவரோ கைகொடுக்கக் கூடும். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி வருத்தம், ஏமாற்றம், கோபம், பாரம் இவற்றை புரிந்து கொண்டு தீர்வு கான வேண்டும். அதற்குரிய ஆலோசனைகள், அன்பு, அரவணைப்பு இவற்றை நேசக்கரம் நீட்டினால் தற்கொலை முயற்சிகள் நிச்சயமாக தடுக்க முடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்