தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே | Stress Fighting Tips for Mom

தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

ஸ்ட்ரெஸ்… யாருக்குத் தான் இல்லை… படிக்கும் குழந்தைகளுக்குகூட இருக்கிறதாம். அதுவும் பிரசவத்துக்கு பிறகான தாய்மார்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிக அளவில் இருக்கும். அதை எப்படி சமாளிப்பது? எப்படி ஸ்ட்ரெஸ் சூழ்நிலையிலிருந்து வெளியில் வருவது?

ஸ்ட்ரெஸ் விரட்டலாம்… டெக்னிக் மற்றும் தீர்வுகள்…

கெஃபைன், ஆல்கஹால், நிகோட்டீன்

இது மூன்றும் ஸ்ட்ரெஸை அதிகப்படுத்தும்.

உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் தரும் ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கும்.

ஆல்கஹால் அதிக அளவு பருகினால் ஸ்ட்ரெஸ் தூண்டப்படும்.

மிகவும் குறைந்த அளவு பயன்படுத்தினால், ரிலாக்ஸிங்காக இருக்கும்.

இதற்குப் பதிலாக தண்ணீர், ஃப்ரெஷ் ஜூஸ் சாப்பிடலாம்.

உங்களது உடலின் நீர்ச்சத்துகளின் அளவை நீங்கள் சரியாகப் பராமரித்தாலே, ஸ்ட்ரெஸ் உங்களைத் தாக்காது.

மறைமுகமாக நம் உடலில் சேர்க்கப்படும் சர்க்கரையும் நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். குளிர்ப்பானங்கள் குடிக்க கூடாது.

செயற்கையான பழச்சாறுகள், செயற்கையான ஆரோக்கிய பானங்களும் குடிக்க கூடாது.

ஸ்ட்ரெஸ் விரட்டும் உணவுகள்

ஃப்ரெஷ் ஜூஸ்

இளநீர்

பழங்கள், காய்கறிகள், கீரைகள்

அளவான டார்க் சாக்லேட்

உங்களுக்குப் பிடித்த நல்ல உணவுகள்

உடலுக்கு உடற்பயிற்சி

உடலில் உடலுழைப்பு குறைந்தால் ஸ்ட்ரெஸ் வரும்.

தசைகள், உடலுக்கான அசைவுகள் நிச்சயம் தேவை.

வீட்டு வேலை செய்தாலும் உடல் முழுவதற்கும் வேலை இல்லை. உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடலுக்கான வேலைத் தரப்படும்.

தினமும் 30-40 நிமிடங்களுக்கு உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை செய்திடுங்கள்.

உங்களது தூக்கத்தின் தரத்தையும், உடற்பயிற்சி உயர்த்தும்.

காலை அல்லது மாலையில், சுத்தமான காற்று நிரம்ப இயற்கை சூழலில் பிரிஸ்க் வாக் செய்யுங்கள்.

இதையும் படிக்க: மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்ன செய்ய கூடாது? என்னென்ன செய்யலாம்?

தூக்கம் மிகவும் முக்கியம்

தூக்கம் சரியாக இல்லாமல் இருந்தால், 100% ஸ்ட்ரெஸ் வரும்.

சிலருக்கு ஸ்ட்ரெஸ் இருந்தால், தூக்கம் சரியாக வராமலும் இருக்கும்.

தூங்கும் முன் உங்களை நீங்கள் ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

உங்களது தூங்கும் அறை, உங்களுக்கு நிம்மதி தரும் படி அமைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்ட்ரெஸ் தரும் எவையும் படுக்கை அறையில் இருக்க வேண்டாம்.

தூங்கும் முன்னர், மூளைக்கு அதிகம் வேலைக் கொடுக்க வேண்டாம். இதனால், மூளை இயல்பு நிலைக்கு வர நேரம் எடுக்கும்.

தூங்கும் முன்னர் இளஞ்சூடான தண்ணீரில் குளித்தாலும், நன்றாகத் தூக்கம் வரும்.

தூக்கம் வரவைக்கும் புத்தகங்களைப் படித்தாலும் தூக்கம் தானாக வரும்.

தூங்குவதற்கென சரியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்த நேரத்தில் தூங்கி எழுவதை சரியாகப் பின்பற்றுங்கள்.

இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்…

ரிலாக்சேஷன் டெக்னிக்

உங்களுக்கு எனர்ஜி தரும் மந்திரங்களை சொல்லி பழகுங்கள்.

அமைதி, நல்லது, மகிழ்ச்சி, அன்பு, பாதுகாப்பு, நிம்மதி, காதல் போன்ற உற்சாகம் தரும் பாசிடிவ் வார்த்தைகளை அடிக்கடி சொல்லுங்கள்.

எனக்கு நல்லதே நடக்கிறது, நான் ஹெல்தி, ஹாப்பி, நான் மகிழ்ச்சியானவள், என் வாழ்வில் எல்லாமே சிறப்பாகிறது, எல்லா நன்மைகளும் எனக்கு நடக்கிறது, நான் கடவுளால் விரும்பப்படுபவள், அதிர்ஷ்டசாலி என மாயஜால வார்த்தைகளை உங்களுக்குள்ளே சொல்லி உங்கள் வாழ்க்கையை நீங்களே சூப்பராக மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான நபரை நண்பராக்குங்கள்

உங்களுக்கான ஒருவர் இருப்பது நல்லது. யாருடன் உங்களது பிரச்னைகள், ஐடியாஸ், குழப்பங்கள், தீர்வுகள் போன்றவை பேச முடியுமோ அவரை நண்பராக்குங்கள்.

டென்ஷன், பதற்றம் இவையெல்லாம் நீங்கும். நம்பிக்கையான நல்ல நண்பரைத் தேர்ந்தெடுங்கள்.

ஸ்ட்ரெஸ் டைரி

உங்களுக்கு அதிக ஸ்ட்ரெஸ் தரும் விஷயங்களை எழுதி வையுங்கள்.

இதனால் எதனால் நீங்கள் ஸ்ட்ரெஸ் ஆகிறீர்கள் என்ற தெளிவு கிடைக்கும்.

அதைப் புத்திசாலித்தனமாக தவிர்க்க உதவியாக இருக்கும்.

ஸ்ட்ரஸ் தரும் விஷயங்களை எழுதிவிட்டு, அதில் 1 – 10 ரேட்டிங் கூட எழுதி வையுங்கள்.

எது அதிகம் , எது குறைவு எனத் தெரியும்.

பின்னர் அதைத் தவிர்க்க வழியும் கிடைக்கும்.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

முடிவு, தீர்வு எடுப்பது

ஸ்ட்ரெஸ் டைரியில் எழுதியபடி, அதிக அளவு ஸ்ட்ரெஸ் தரும் பிரச்னையை எடுத்து, அதற்கானத் தீர்வு என்ன என்பதை எழுதுங்கள்.

அந்தத் தீர்வில் கிடைக்கும் நன்மை, தீமை எழுதுங்கள்.

நன்மை அதிகமாக இருந்தால், அந்த முடிவு சரியானது.

தீமை அதிகமாக இருந்தால், அந்த முடிவு தவறானது.

உங்களுக்குத் தெளிவான முடிவு நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துகள்…

உங்களது நேரத்தை டிசைன் செய்யுங்கள்

‘To Do’ list’ எனச் சொல்வார்கள்.

இன்று எதை செய்வது என எழுதுங்கள்.

முக்கியத்துவம் 1, 2 மற்றும் 3 என எழுதி அதில் உங்களது வேலைகளை எழுதுங்கள்.

முக்கியத்துவம் 1 தலைப்பில் உள்ளதை முதலில் முடித்து விடுங்கள்.

பின் 2, 3 தலைப்புகளைக் கவனியுங்கள்.

இதனால் டென்ஷன், பதற்றம், தடுமாற்றம் நீங்கும்.

இதையும் படிக்க: தாயுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துகள்… இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா?

சில விஷயங்களுக்கு நோ சொல்லித்தான் ஆக வேண்டும்

பிடிக்காத ஒரு நபர் உங்களை எரிச்சலாக்கினால், அவரை நோ சொல்லப் பழகுங்கள்.

தேவையில்லாத அழைப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்.

சில விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை, அதை வேண்டாம் எனத் தைரியமாக நோ சொல்லுங்கள்.

தெரியாத நபர் உங்களைக் குழப்பினாலும், அவரது பழக்கத்தை நோ சொல்லி தவிர்த்து விடுங்கள்.

இதனால் தன்னம்பிக்கை வளரும்.

தியானம்

தியானம் மூளையை அமைதிப்படுத்துகிறது என அறிவியல் பூர்வமாக சொல்கிறது சில ஆய்வுகள்.

உங்களைப் புதுமனிதனாக்க உதவுவது தியானம்.

நல்ல படங்கள்

உங்களது அழகான படங்கள், மகிழ்ச்சி தர கூடிய படங்கள், நிம்மதி தரக்கூடிய வால்பேப்பர், ஸ்கிரீன் சேவர், வீட்டில் நல்ல நல்ல வாசகங்களை மாட்டி வையுங்கள். இதெல்லாம் அன்றாடம் நீங்கள் பார்க்க, பார்க்க மாற்றங்கள் வரும்.

இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…