ஒருவரின் உடல்திறனைப் பொருத்து, எவ்வளவு அட்டாக்குகளை கடந்தும் உயிர்வாழ முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திடீர் இருதய அடைப்பு அகால மரணத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க கார்டியோ பூமோனேரி ரிஸ்க்யூசேஷன் அல்லது சி.பி.ஆர். என்ற முதலுதவி சிகிச்சையின் மூலம் மரணத்தின் இறுதி தருவாயில் இருந்து கூட பலரும் மீட்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் சிலர் இதே முறையை பயன்படுத்தி ஒரு அணிலை காப்பாற்றியுள்ளார். அணில் மின் கம்பியில் தாக்கப்பட்டு திடீர் மாரடைப்பால் தவித்தது. அதனைக் கண்ட இளைஞர்கள் சிலர், அந்தப் பெண் அணிலை சாலையில் தங்கள் இரு சக்கர வாகனத்தில் வைத்து சி.பி.ஆர் முறையில் அணிலின் இதய பகுதியில் விரலால் அழுத்தி சிகிச்சை அளித்தனர்.
சிறிது நேரத்தில் வாய் வழியாக மூச்சுவிட்ட அணில் பின்னர் மெல்ல மெல்ல மூச்சுவிடத்தொடங்கி, புத்துயிர் பெற்று நிலத்தில் துள்ளிக் குதித்து ஓடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.