மனைவியை மனிதனாக கருதாமல் அடிமையாக கருதி அவர்களை அடிப்பது, கொடுமை படுத்துவது, சந்தேகப்படுவது போன்ற செயல்களினால் பெண்களுடைய வாழ்க்கை வேதனைக்குள்ளாகிறது. அந்த வேதனையை வேறொரு ஒரு ஆண் கூட தீர்த்துக்கொள்ள பெண்கள் முயற்சி செய்கின்றனர். கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அது கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கிறது.
பெண்கள் தன் துணையிடம் கிடைக்காத பாதுகாப்பு கணவனிடம் அல்லாமல், வேறொரு நபரிடம் இருந்து கிடைக்கும்போது அவருக்கு அந்த நபரிடம் ஆசை ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. இதானல் சில பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர்.
மனைவியிடம் நேரத்தை செலவிடாமல் கணவர் இருக்கும் வீட்டில் எளிதாக இன்னொரு ஆணின் நட்பு அந்த பெண்ணின் மனதை கலைக்கிறது. தன்னுடைய கணவர் தன்னுடன் தனிமையில் நேரத்தை செலவிட வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள்.
கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவு உருவாகின்றன. பெண்களுடைய உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளதாபோது, கணவன் மீது வெறுப்பு ஏற்படுகிறது.
பெரும்பாலான பெண்கள் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருப்பதால் அதிகமாக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேறொரு பெண்ணுடன் ஆண் மிக சுலபமாக உடலுறவு வைத்துக் கொள்ளவார்கள். பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் அவர்களுடைய தேவை முடிந்ததும் பின்வாங்கி விடுகிறார்கள். பெண்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய தேவைகள் பூர்த்தியாக வேறொரு உறவை தேடி அவர்கள் செல்கிறார்கள்.