மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய தங்கம் விலை!

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய தங்கம் விலை!

நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் மீண்டும் ஏறிய தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 232 குறைந்து டிசம்பர் 2ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 30224/- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் ஒரு சவரனுக்கு ரூ.296 ஏறியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,789 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,312 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,628 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,024 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு ரூ. 296 ரூபாய் அதிகரித்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,665 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,320 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,826 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,608 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

4.12.2019 – 1 grm – Rs. 3826/-, 8 grm – 30,608/- ( 24 கேரட்)

4.12.2019 – 1 grm – Rs. 3665/-, 8 grm – 29,320/- (22 கேரட்)

வெள்ளி விலையும் ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு ரூ. 700/- ஏறியிருக்கிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 48.60 ஆகவும் கிலோ ரூ.48,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்