தினமும் தியானம், யோகா போன்றவை செய்வதால் நிரூபிக்கப்பட்ட பல நன்மைகள் நமக்கு உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவற்றில் ஒன்று நினைவாற்றாலை மேம்படுத்துவது. தியானம் செய்வதால் நரம்பு இணைப்புகள் மேம்படுகின்றன. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. தேவையில்லாத விஷயங்களை விலகி முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. தினசரி தியானம் செய்வதால் மூளையில் உள்ள கட்டமைப்பு மாறி, கவனம் செலுத்த உதவும் நரம்புகளை நன்றாக மாற்றும்.
நினைவுகள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பது மற்றும் ஒழுங்கமைப்பது முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது மற்றும் தேவையில்லாத விஷயங்களை நினைவிலிருந்து அகற்றுவதற்கும் தினசரி நிகழ்வு அட்டவணை உதவுகிறது. வழக்கமான பணிகளைச் செய்வது, தினசரி நிகழ்வுகளை எழுதுவது, சுத்தம் செய்வது அல்லது நினைவூட்டல்களை அமைப்பது போன்ற எளிய தகவல்களைச் சேமிக்க
இந்த தினசரி நிகழ்வு அட்டவணை உங்களுக்கு மிகவும் பயன்படும். பணிகளை திறமையாகவும் சிறப்பாகவும் செய்யவும், முக்கியமான தகவல்களை நீங்கள் மறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவும் இது உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வது என்பது உங்கள் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் செயல். ஒருவித உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் மன செயல்பாடுகளை நன்றாக வைத்திருக்க உதவுகிறது.
கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை விட சரியான நேரத்தில் தூங்குவது அதிக நன்மைகளைக் கொடுக்கிறது. நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது மூளையின் ஆரோக்கியத்தையும் மூளையின் பகுதியையும் மேம்படுத்துகிறது. இது நினைவுகளை பிரத்தியேகமாக சேமித்து நினைவாற்றாலை மேம்படுத்துகிறது.