காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாற்றில் வெந்நீர் கலந்து குடிங்க! இதனை நன்மைகளும் உடலுக்கு வந்து சேரும்!

காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாற்றில் வெந்நீர் கலந்து குடிங்க! இதனை நன்மைகளும் உடலுக்கு வந்து சேரும்!

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும். கபம் அதிகம் இருந்தால் 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

காலையில் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் குடலியக்கம் சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர். எலுமிச்சையானது செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க உதவுகிறது. மேலும் இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும்.

வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றை கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.
எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் போன்றவை குறையும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்