பனைமரத்திற்கு இவ்வளவு பலன்களா? நாம் அறிந்திராத பனையின் பல்வேறு மருத்துவ குணங்கள்

பனைமரத்திற்கு இவ்வளவு பலன்களா? நாம் அறிந்திராத பனையின் பல்வேறு மருத்துவ குணங்கள்

பண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. அவற்றை மேன்மேலும் வளர்க்க யாரும் முயற்சி மேற்கொள்ளாததால், பனை மரங்களின் வளர்ச்சி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழக அரசின் சின்னமாகவும் பனை மரம் விளங்கி வருகிறது.

அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டது பனம்பழம். 

பனம்பழம் எப்போதும் கிடைக்காது. வருடத்தில் சில மாதங்களில்தான் அது கிடைப்பதுண்டு. அப்போதுதான் கிராமங்களில் நொங்கு, பதநீர் எளிதில் கிடைக்கும். 

பனை மட்டைகளில் மடித்து நொங்கு விற்பார்கள். மண்பானைகளில் பதநீர் கொண்டுவருவார்கள்.பனம்பழம் அப்படி கொண்டு வந்து விற்கமாட்டார்கள். 

அவை மரங்களிலேயே பழுத்துவிடுபவை. அதிலும் நொங்குக்காக வெட்டப்படாத பனங்காய்களின் குலைகள் மரத்திலேயே இருந்தால்தான் அவை பழுத்து பனம்பழமாகும்.

பழுத்த பழமாக இருந்தாலும் அதன் தோல் வாழவழப்புடன் கடினமாகவும் இருக்கும். அதைக் கடித்து பிய்த்து உள்ளேயுள்ள சதையையும் நாரையும் மென்று சப்பினால் சுவையோ சுவை!

பழுத்த பனம்பழங்கள் மரத்திலிருந்து தானாக கீழே விழுந்துவிடும். இரவில் விழுபவை காலையில் மரத்தடியில் கிடக்கும். யார் அந்த பக்கம் விடியலில் போகிறார்களோ அவர்கள் அவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

பனம் பழம்

பனம் பழம் என்பது பனை மரத்தின் பழம் ஆகும். 15 சமீ (6 அங்குலம்) தொடக்கம் 20 சமீ (8 அங்குலம்) வரை விட்டம் கொண்ட இவை குலைகளாகக் காய்க்கின்றன. நார்த் தன்மை கொண்ட இதன் தோல் கரு நிறமானது. இப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று விதைகள் இருக்கும்.

ஏறத்தாள 10 சமீ வரை அகல நீளங்களைக் கொண்ட சதுரப் பாங்கான வடிவம் கொண்ட இவ்விதைகள், அண்ணளவாக 2.5 சமீ தடிப்புக் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் காணப்படுகின்றன. 

இத் தும்புகளிடையே களித் தன்மை கொண்ட, உணவாகக் கொள்ளத்தக்க, செம்மஞ்சள் நிறப் பொருள் உள்ளது.  இது பனங்களி எனப்படுகின்றது.

ஏனைய பழங்களைப் போல் இப்பழத்தை நேரடியாக உட்கொள்வதில்லை. இதனை நெருப்பில் சுட்டே உண்பது வழக்கம்.நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள். இக்களி கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. 

இதை நேரடியாக உண்பது மட்டுமன்றி, இக் களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருட்களையும் செய்வது உண்டு. இக்களியைப் பிழிந்து, பாய்களிற் பரவி, வெயிலில் காயவிட்டுப் பெறப்படுவது பனாட்டு எனப்படுகின்றது. 

இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. 
இப் பனாட்டிலிருந்து பாணிப் பனாட்டு என்னும் ஒருவகைப் உணவுப் பண்டமும் தயாரிக்கலாம். 

இக் களியை அரிசி மாவுடன் கலந்து, சீனியும் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுப்பர். 

இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் எனப்படுகின்றது.

இலக்கியத்தில் பனம்பழம் :-

தமிழ் இலக்கியத்தில் ஔவையார் என்பது சிறப்பிடம் பெற்றுள்ள ஒரு பெயர்.  இவர் பாடியதாகக் கூறும் பல பாடல்களும், இவர் தொடர்பான பல கதைகளும் உள்ளன. இதுவும் அவ்வாறான ஒரு விடயம் :-

புகழ் பெற்ற வாள்ளலான பாரி பறம்பு மலையின் வேந்தன். மூவேந்தர்களான சேர, சோழ பாண்டியர்கள் பாரியுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று அவன் நாட்டையும் கவர்ந்து கொண்டனர். 

பாரியின் பெண் மக்கள் இருவரும் அனாதைகளாகித் துயருற்றனர். அவர்களுக்கு மணம் முடித்து வைக்க ஔவையார் முன்வந்து திருக்கோவலூர் மலையமானுக்கு அவர்களைத் திருமணம் செய்ய ஒழுங்கு செய்தார்.

திருமணத்துக்காக மூவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பினார். திருமணத்துக்கு வந்த மூவேந்தர்கள் பனம்பழம் கேட்டார்கள்.  அது பனம்பழக் காலமல்ல. கேட்டதைக் கொடுக்காவிட்டால் பிரச்சினை வரக்கூடுமென உணர்ந்த ஔவையார். 

வெளியே கிடந்த பனை மரத் துண்டம் ஒன்றைப் பார்த்து,

“திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்றார், மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!”

என்ற பாடலைப் பாடவே பனந்துண்டம் முளைத்து வளர்ந்து பழம் ஈந்ததாம்.

யாழ்ப்பாணத்து நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலத்திலே மேல்நாட்டு மோகம் அதிகரித்து உள்ளூர் உற்பத்திகள் நலிவடைந்து, மரபுவழிப் பழக்க வழக்கங்களும் மதிப்புக் குறைவானவையாகக் கருதப்பட்டன.

அக்காலத்தில் பனையின் உற்பத்திகளைப் பிரபலப் படுத்துவதற்காக அவர் பாடிய பின்வரும் பாடலிலே மேற்காட்டிய ஔவையாரின் பாடலை எடுத்துக்காட்டியுள்ளார்.

திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும்,
பாண்டியனும் ஔவை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ ஞானப் பெண்ணே
 

ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம் பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது.

பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும்.

பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம். பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும். 

உடலைத் தேற்றும் பனங்கிழங்கு பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். 

சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும். பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். 

கண்ணில் புண் வந்தால் :-

பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும், எரிச்சல் தீரும் :-

பனை மரத்தின் பாகங்கள் பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள்.

பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது. 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்