இந்தச் சுழலானது மலேசியாவின் பினாங்கில் கடல் பகுதியில் நேற்று மிகப்பெரிய அளவில் தோன்றியது. 5 நிமிடங்கள் வரை நீடித்த இந்த அதிசய இயற்கை நிகழ்வானது அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அறிவியல் ரீதியாக இந்நிகழ்வானது குளிரான மற்றும் நிலைத்தன்மையற்ற காற்றானது, சூடான நீர்ப்பரப்பை கடக்கும் போது இந்தச் சுழல் தோன்றும் மற்றும் கடல் நிலப்பரப்பை அடைந்தவுடன் அது கலைந்து விடும்.
என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த அதிசய நிகழ்வானது சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பரவி வருகிறது இதைப் பார்த்த பல்வேறு இணையதள ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.