மெடிக்கல் மிராக்கிள்! எய்ட்ஸ்சில் இருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்! இந்திய டாக்டரின் அற்புத சாதனை!

மெடிக்கல் மிராக்கிள்! எய்ட்ஸ்சில் இருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்! இந்திய டாக்டரின் அற்புத சாதனை!

குப்தா என்ற டாக்டர்தான் இந்த சிகிச்சையை செய்துள்ளார். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர், இதற்கு முன் லண்டன் யுனிவர்சிடி காலேஜில் பணிபுரிந்துள்ளார். அப்போது, குப்தாவிடம் எச்ஐவி நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். 
அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக, எய்ட்ஸ் கிருமியை நீக்கி, உடல் ரத்தத்தை குப்தா சுத்தம் செய்துள்ளார். இதன்படி, அந்த நோயாளி தற்போது எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளார். இது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
உலகிலேயே எயிட்ஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்ட 2வது நபர் இவர் ஆவார். இதற்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் 2007ம் ஆண்டு ஜெர்மனியில் இத்தகைய சிகிச்சை மூலமாக, எயிட்ஸ் தொற்று அகற்றப்பட்டிருந்தார். 
குப்தாவின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதில் குணமான நோயாளியின் விவரங்கள் பற்றியும் நேச்சுரல் பத்திரிகையில் பிரத்யேக கட்டுரை வெளியிடப்பட உள்ளதாக, மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டாக்டர் குப்தா இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்