இதுதொடர்பாக, ஐதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிக்யூலார் பயலாஜி நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த ஆய்வை, தங்கராஜ் தலைமையிலான ஆய்வுக்குழு நடத்தியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் இருந்து, 973 மலட்டுத்தன்மை உள்ள ஆண்களை பரிசோதித்துள்ளனர். இதேபோல, நல்ல வீரியமாக உள்ள 587 ஆண்களையும் ஆய்வாளர்கள் பரிசோதனை செய்தனர்.
இதன்படி, பல பேருக்கு லைஃப்ஸ்டைல் பிரச்னைகள், உடல் கோளாறுகளால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக, தெரியவந்தது. இதைவிட, அதிகமாக, மரபியல் சார்ந்த பிரச்னைகளே, ஆண்களுக்கு அதிக மலட்டுத்தன்மை ஏற்படுத்துகின்றன. மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலருக்கு, ஒய் குரோமோசோம் அழிந்துவிடுகிறது.
இப்படி ஒய் குரோமோசோம்கள் அழிவதற்கு முதல் காரணம், ஒரே பரம்பரைக்குள், ஒரே ஜாதிக்குள், ஒரே இனத்திற்குள் திரும்ப திரும்ப திருமணம் செய்வதால், அவர்களின் தலைமுறையினருக்கு, இப்படியான பாதிப்பு வருவதாக, உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்கள் உள்பட பலருக்கும் இவ்வித பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைப் படித்து முடித்ததும், நீங்கள் காதல் திருமணம்தான் செய்வேன் என சபதம் எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.