சிகரெட் பழக்கத்தை நிறுத்த முடியாம தவிக்கிறிங்களா? செவ்வாழை உங்களுக்கு பெரிதாக உதவும்!

சிகரெட் பழக்கத்தை நிறுத்த முடியாம தவிக்கிறிங்களா? செவ்வாழை உங்களுக்கு பெரிதாக உதவும்!

வாழைப்பழங்களில் பலவகைகள் இருக்கின்றன. அதில் ஒரு வகைதான் “செவ்வாழைப்பழம்”. எல்லா பழங்களிலும் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பண்புகள் ஏராளமாக இருக்கின்றன. இருந்தாலும் மஞ்சள், பச்சை, மலைவாழைப் பழங்களில் இருக்கும் கரோட்டினைக் காட்டிலும் அதிக அளவு கரோட்டின் செல்கள் நிரம்பியுள்ளன.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கின்ற எல்லாருமே எப்படி இந்த சிகரெட்டை விடப் போகிறோம் என்ற யோசனையோடே பிடித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு பழக்கத்தை கைவிட நினைப்பவர்களுக்கு செவ்வாழை ஒரு வரப்பிரசாதமாகும்.

சிகரெட் பிடிப்பதைநிறுத்த விரும்புவர்களுக்கு செவ்வாழை, சில உதவிகளைச் செய்கிறது. செவ்வாழையில் அதிகமாக உள்ள பொட்டாசியமும், மக்னீசியமும் ஒன்று சேர்ந்து நரம்புச் செல்கள் நிகோடின் இழப்பை உணராமல் இருக்க ஓரளவு உதவி செய்கிறது. அதே சமயம் செவ்வாழையில் மிக அதிகமாக இருக்கும் வைட்டமின் பி6, மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சிகரெட்டால் இரத்தக்குழாய் உட்பட உடலில் ஏற்பட்ட பாதிப்புக்களைச் சீரமைக்கும் வேலையைத் தொடங்குகிறது. ஆகவே சிகரெட்டை மனஉறுதியோடு நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற நினைப்பு வரும்போதெல்லாம் ஒரு செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே போதும், அந்த எண்ணம் மறைந்து ஆரோக்கியம் சீரடையத் தொடங்கும்.

செவ்வாழையின் நன்மைகள்.

· செவ்வாழையில் இருக்கும் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ வாக மாறி கண்களின் ஆரோக்கியத்திற்கு காவலனாக அமைகிறது.

· இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

· செவ்வாழை இரைப்பையில் அமில உற்பத்தியைக் குறைத்து இரைப்பைப்புண் காரணமாக ஏற்படும் எரிச்சலைக் கட்டுபடுத்த உதவுகிறது.

· உடல் சோர்வை உடனே விரட்டும்

· தோலை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.

– ராமலெட்சுமி

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்