இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.
இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.