ஆண்கள் கண் அடித்தால் கைது! பெண்கள் கண் அடித்தால் கைது செய்யுமா போலீஸ்? சட்டத்தோழி சொல்வதைக் கேளுங்க!

ஆண்கள் கண் அடித்தால் கைது! பெண்கள் கண் அடித்தால் கைது செய்யுமா போலீஸ்? சட்டத்தோழி சொல்வதைக் கேளுங்க!

கடந்த வருடம் நடிகை பிரியா
வாரியர்,
 கண்ணடித்ததன் மூலம் ஒரே நாளில் உலகப்
புகழ் பெற்றார். அதேபோன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கண் அடித்து
புகழ் பெற்றார்.

இவர்களைப் போன்று நாமும்
கண்ணடித்தால் உலகப் புகழ் பெறலாம் என்று இளைஞர்கள் நினைத்துவிட வேண்டாம். .ஏனென்றால்
பெண்களைப் பார்த்து ஆண் கண்ணடிப்பது இந்திய தண்டனை சட்டம் 1860 படி குற்றம் ஆகும்.
ஆனால் பெண்கள் ஆண்களைப் பார்த்து கண்ணடித்தால் குற்றம் அல்ல. இது என்னய்யா சட்டம் என்று
தோன்றுகிறதா பார்ப்போம் வாருங்கள்.

இந்திய தண்டனை சட்டம்
1860 பிரிவு எண் 509 படி எந்த ஒரு சொல் அல்லது உடல் சைகை மூலம் பெண்ணின் மதிப்பை சீர்
குலைப்பது போல் இருந்தால், அவ்வாறு செய்த ஆணுக்கு மூன்று ஆண்டு வரை சிறை தண்டனையும்
அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்த பிரிவு எண் கீழ் தான்
பொது இடத்தில் பெண்களை பார்த்து தப்பான நோக்கத்தில் கண்ணடித்தல், கேலிப் பெயர் வைத்துக்
கூப்பிடுதல், விசிலடித்தல் போன்ற உடல் மொழிகள் அனைத்துமே தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
இவை அனைத்தும் ஆண்கள் பெண்களைப் பார்த்துச் செய்தால் மட்டுமே குற்றம் ஆகும். ஆனால்
ஆண்களைப் பார்த்து பெண் செய்வது குற்றமாக கருதப்படுவதில்லை. ஏனென்றால், பெரும்பாலும்
பெண்கள் அதுபோன்ற கேலி, கிண்டல்களில் இறங்குவது இல்லை என்பதாலே சட்டம் அவர்களுக்கு
சாதகமாக இருக்கிறது.

ஆணுக்குப் பெண் சமம் என்று
இன்றைய நிலையில் பெண்களும் இதுபோன்ற செயல்களில் இறங்குவது ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது.
அதனால், இந்தப் பிரிவில் திருத்தம் செய்வதற்கான தேவையும் விரைவில் வரும் என்றே நம்புவோம்.
 

நமது இந்திய
அரசியலமைப்பு சட்டம்
1950 (14) எல்லோர்க்கும்
சம உரிமை உள்ளது (Right To Equality) என்று கூறுகிறது. ஆனால் சில சட்டப் பிரிவுகள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பதில்லை. இந்த நிலையை மாற்றுவதற்கு விரைவில்
சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை அரசு அல்லது நீதிமன்றம் முன்னெடுக்கும்
என்றே நம்புவோம்.

ஒவ்வொரு குடிமகனுக்கும்
சட்டம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளையும் நமக்கான பொறுப்புகளையும்
அறிந்துகொள்ள முடியும். மீண்டும் இதேபோன்ற ஒரு கேள்வியுடன் சந்திக்கிறேன். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்