கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்கக்கூடாதா ??

கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்கக்கூடாதா ??

·        
கர்ப்பிணிகள் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்கக்கூடாது என்பது உண்மைதான். குறிப்பாக 98 டிகிரிக்கு மேல் சூடான தண்ணீரில் குளிப்பது கர்ப்பிணிகளின் உடலுக்கு தீமை விளைவிக்கலாம்.

·        
ஆனால் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை வெதுவெதுப்பான குளியல் போக்கிசவிடும்.

·        
வெதுவெதுப்பான நீரில் குளிக்கும்போது கர்ப்பிணிகளுக்கு நல்ல நிம்மதியான சந்தோஷமான மனநிலை கிடைப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

·        
கர்ப்பிணியின் உடலில் அம்னியோடிக் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மையும் வெந்நீர் குளியலுக்கு உண்டு.

அதனால் பச்சைத் தண்ணீரில் குளிப்பதைவிட, வெதுவெதுப்பான நீரில் குளிப்பதுதான் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதுபோல் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குளிக்கவேண்டும் என்று கூறப்படுவதும் ஏற்கக்கூடியது அல்ல.. கர்ப்பிணிகள் தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் நீச்சலடித்து குளிப்பதும் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!