பிறந்த குழந்தைக்கு மார்பு வீக்கம்

பிறந்த குழந்தைக்கு மார்பு வீக்கம்

·        
ஆண், பெண் இரண்டு குழந்தைக்கும் மார்பு
வீக்கமாக காணப்படுவதற்க்கு வாய்ப்பு உண்டு.

·        
குழந்தைக்கு பால் தருவதற்காக,
பெண்ணுக்கு  ஈஸ்ட்ரோஜன் அதிகமாக
சுரக்கும்போது, ஹார்மோன் அதிகரித்து தாயின் மார்பு பெரிதாகிறது.

·        
தாயிடம் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றம்
குழந்தைக்கும் தொப்புள் கொடி மூலம் பரவுகிறது. அதனால்தான் பிறக்கும் குழந்தைகளும்
மார்பு வீக்கத்துடன் பிறக்கிறார்கள்.

·        
இந்த வீக்கம் இரண்டு வாரங்களுக்கும்
நிச்சயமாக வற்றிவிடும் என்பதால் பெற்றோர் கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை.

குழந்தையின்
மார்பை சிறிதாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நசுக்குவது அல்லது பாலை பீய்ச்சி
எடுப்பது போன்ற எந்த காரியங்களையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. தாயிடம் இருந்து
ஈஸ்ட்ரோஜன் தொடர்ந்து குழந்தைக்கு கிடைக்காது என்பதால் தானாகவே சரியாகிவிடும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?