·
பூமிக்கு வந்த 30 நொடிகளில் இருந்து ஒரு
நிமிடத்திற்குள் குழந்தை அழத்தொடங்க வேண்டும்.
·
நுரையீரல் நிரம்பும் அளவுக்கு காற்றை
இழுப்பதற்கு சாதாரண சுவாசம் போதாது. அதனால்தான் அழுகையின் மூலம் கூடுதல் ஆக்சிஜனை
எடுத்துக்கொள்கிறது குழந்தை.
·
மூக்கு, வாய், நுரையீரலில்
தேங்கியிருக்கும் தேவையற்ற நீரை அகற்றுவதற்கும் அழுகை உதவுகிறது.
·
குழந்தை அழவில்லை என்றால், சினிமாவில்
காட்டுவது போன்று குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கவேண்டியது இல்லை.
சாதாரணமாக முதுகு, கால்களை தட்டிக்கொடுத்தாலே போதும்.
குழந்தை பிறந்ததும் அழவில்லை என்றால்,
நுரையீரல் முழுமையாக செயல்படும் வரையிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
சுகப்பிரசவம் என்றாலும், சிசேரியன் என்றாலும் குழந்தை பிறந்தவுடன் அழவேண்டியது
அவசியம்.