சென்னையை சேர்ந்த பத்மா லஷ்மி, அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் சிறு வயதிலேயே குடியேறிவிட்டார். அங்கேயே உயர் கல்வி கற்ற பத்மா லஷ்மி, மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதுதவிர, உணவுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பத்மா லஷ்மி, டாப் செஃப் நிறுவனத்தில் உயர் பதவியும் வகித்துள்ளார்.
இத்தகைய திறமைகளுக்குச் சொந்தமான பத்மா லஷ்மி, மகளிர் தினத்தை ஒட்டி, ஐ.நா.சபையின் முன்னேற்ற திட்டத்திற்கான நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டார்.
இதுபற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட பத்மா லஷ்மி, உலக நாடுகள் பலவற்றில் இன்னமும் ஆண்,பெண் பாகுபாடு நிலவுகிறது. பெண்கள் பலவிதமாக ஒடுக்கப்படுகின்றனர். அவர்களின் நலனை மேம்படுத்த முடிந்தவரை முயற்சிப்பேன் எனக் கூறியுள்ளார்.