48Mp சென்சார் கேமெராவை கொண்ட புதிய மாடல் ஸ்மார்ட் போன் வெளியாகவுள்ளது, இதன் பெயர் ஒப்போ 10x எக்ஸ் ஜூம் ஆகும். இந்த ஸ்மார்ட் போன் முழுவதும் கேமெராவை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுவதாக ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதர்காகவே ப்ரெத்யேகமாக சென்சார் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த 48Mp கேமெராவை பயன்படுத்தி 10X மடங்கு வரை ஜூம் செய்யும் வசதி அறிமுகம்படுத்தப்படவுள்ளது (10x lossless zooming). இந்த ஜூம்மிங் வசதியை பெறுவதற்காக 3 கேமெராக்கள் ஒரே சமயத்தில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் அல்ட்ரா வைட் ஆங்கிள், அல்ட்ரா கிளீயர் மெயின் சென்சார் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகிய 3 விதமான கேமராக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதில் உள்ள ஓவ்ஒன்ரும் பல செயல்பாட்டை ஒன்றாக இணைந்து செய்கின்றது.
அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 15.9 மிமீ ஒரு சமமான மைய நீளம் கொண்டது, இது பரந்த-கோண காட்சிகளை வழங்குகிறது மற்றும் கிளீயர் மெயின் சென்சார் கேமரா தெளிவான புகைப்படங்கள் உறுதி மற்றும் டெலிஃபோட்டோ கேமரா 159 மிமீ சமமான மைய நீளம் வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட் போனில் Snapdragon 855 பிராசசர், ஹைப்ர் கூலிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் போனில் பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளதாக ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது.
இத்தகைய தொழில்நுட்பங்களை கொண்டுள்ள ஒப்போ 10x எக்ஸ் ஜூம் ஸ்மார்ட் போன் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது