·
குறை பிரசவத்தில் பிறக்கும்
குழந்தைகளுக்கு சுவாசக் குறைபாடு இருப்பதன் காரணமாக அழாமல் இருக்கலாம்.
·
சளி, அமோனியா திரவங்கள் மூக்கு, வாயில்
அடைத்திருப்பதால் குழந்தை அழமுடியாமல் போகலாம். இதனை மருத்துவர் கண்டறிந்து
அகற்றினால் மட்டுமே குழந்தையால் அழமுடியும்.
·
கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியே
வந்தபிறகும், அதனை உணராமல் சில குழந்தைகள் இருப்பதுண்டு, இதுவும் அழாமல்
இருப்பதற்கு காரணமாக கருதப்படுகிறது.
·
பேச்சுக் குறைபாடு அல்லது வேறு சில உடல்
நலக்குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளும் அழாமல் இருக்கலாம்.
குழந்தையின்
உடலும் மூளையும் இணைந்து செயல்படத் தொடங்குவதன் அறிவிப்பு என்றும் அழுகையை
எடுத்துக்கொள்ளலாம். அழாத குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கு
நியோனடல் சிகிச்சை கைகொடுக்கிறது.