மாதவிலக்கு சீக்கிரம் வரணுமா அல்லது லேட்டா வரணுமா..? இதோ எளிய வழிமுறைகள்

மாதவிலக்கு சீக்கிரம் வரணுமா அல்லது லேட்டா வரணுமா..? இதோ எளிய வழிமுறைகள்

நவீனயுகத்தில் பெண்களுக்கு சரியான சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவதில்லை. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கோவில் திருவிழாக்களிலும், இதர சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 

பெண்களின் இந்த கஷ்டத்தை போக்குவதற்கான உணவு பொருட்களைப்பற்றி இங்கு பார்ப்போம்.

மாதவிடாய் விரைவில் வருவதற்காக சாப்பிடப்படும் பொருட்கள்:

பப்பாளி:

உடலின் வெப்பத்தை அதிகரித்து மாதவிடாய் விரைவில் எளிதாக உருவாக்கும். மேலும்  உடற்சத்து மிகுதியாக இருப்பதால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உடல் வலிமையை அதிகரிக்கும்.

ஓம விதைகள்:

3 ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் பருகி வந்தால் மாதசுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவதற்கான நாட்கள் குறையும்.

எள்:

மாதவிடாய் ஏற்படுவதற்கான 15 நாட்களுக்கு முன்னிருந்து எள்ளை தண்ணீருடன் பருகி வந்தால் மாதவிடாய் விரைவில் ஏற்படும். 

மாதவிடாய் தள்ளிப்போவதற்கான உணவு பொருட்கள்:

வெந்தயம்:

மாதவிடாய் ஏற்படக்கூடிய ஐந்து நாட்களுக்கு முன்னிருந்து வெந்தயத்தைத் தண்ணீருடன் பருகி வந்தால் உடல் வெப்பம் குறைந்து மாதவிடாய் தள்ளிப்போகும்.

வெள்ளரிக்காய்:

மாதவிடாய் ஏற்படக்கூடிய ஐந்து நாட்களுக்கு முன்னிருந்து காலையில் வெள்ளரிப் பிஞ்சுகளை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறைந்து மாதவிடாய் தள்ளிப்போகும்.

பொட்டுக்கடலை:

தினமும் காலையில் பொட்டுக்கடலையை வெறும் வயிற்றுடன் நின்று தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாய் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகளுண்டு.

மேற்கூறிய உணவு முறைகளை கடைபிடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்