கருகருவென கூந்தல் வளர! கேரள வீட்டு வைத்தியங்கள்!

கருகருவென கூந்தல் வளர! கேரள வீட்டு வைத்தியங்கள்!

முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். முடிக்கு ஷாம்பு போடுவதை தடுக்க வேண்டும். ரசாயனப் பொருட்கள் முடிக்கு கேடு விளைவிக்கும். முடியை வலுவிழக்கச் செய்யும்.

தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங் காயம் ஒன்றை எடுத்துக்கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து பின்னர் அங்கே தேனை தட வினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள். ஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடிகொட்டுவதை தவிர்க்கலாம்.  பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து – 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள், அதுவும் ஒரு தீர்வே. தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்