* உணவுக்குப்
பிறகு ஏலக்காய்
அல்லது கிராம்பு
போன்றவற்றை எடுத்து
வாயில் போட்டு
மென்று தின்றால்
துர்நாற்றம் ஓடிப்
போகும்.
* கொத்தமல்லி,
புதினா போன்றவையும்
துர்நாற்றம் போக்கும்
தன்மை கொண்டவை.
அதனால் தண்ணீரில்
அலசி பச்சையாகவே
மெல்வது நல்ல
பலன் தரும்.
* கொய்யாப்
பழமும் மாதுளம்
பழமும் வாயில்
தோன்றும் துர்நாற்றத்தை
தடுக்கும் தன்மை
கொண்டவை ஆகும்.
அதனால் சாப்பாட்டுக்குப்
பிறகு இந்தப்
பழங்களை எடுத்துக்கொண்டாலும்
நல்ல பலன்
கிடைக்கும்.
இந்தப் பொருட்கள்
எல்லாமே எவ்வித
பக்கவிளைவும் தராதவை
என்பதுடன் உடல்
ஆரோக்கியத்துக்கும் ஏற்றவை
ஆகும்.