• இது பல் முளைக்கும் நேரம் என்பதால் ஈறுகளில் எதையேனும் கடிக்கவேண்டும் என்ற அரிப்பு இருக்கும். அதனால் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் குழந்தை வாயில் போடும்.
• பொம்மை மட்டுமின்றி, சுவரில் இருக்கும் சுண்ணாம்பு, மண் போன்றவற்றையும் எடுத்து வாயில் போடுகிறது.
• இதனால் பாக்டீரியா, ஒட்டுண்ணிகளால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
• வயிற்றுப்போக்குக்கு வெந்நீரில் குளுக்கோஸ், உப்பு கலந்து கொடுக்க வேண்டும். அர்ரோட் மாவு கரைத்துக்கொடுக்கலாம் அல்லது கேரட், ஆப்பிள் போன்றவற்றை வேகவைத்து மசித்து கொடுத்தாலும் குணம் தெரியும்.
தண்ணீர் சத்து குறைதல், வாய் உலர்ந்துபோதல், அழும்போது குறைவாக கண்ணீர் வருதல், சிறுநீர் நிற மாற்றம் அடைதல் போன்ற பிரச்னைகளுக்கும் வயிற்றுப்போக்கிற்கும் தொடர்பு உண்டு என்பதால் உடனடி சிகிச்சை தொடங்க வேண்டும்.