உறிஞ்சும் திறன் காரணமாக பால் குடிப்பதற்கான இடத்தை குழந்தை தேடுகிறது. அன்பும் அரவணைப்பும் கொடுத்து குழந்தைக்கு மார்பகத்தை தாய் அடையாளம் காட்ட வேண்டும். தாயின் உடலோடு ஒட்டிவைத்து முழங்கை மீது படுக்கவைத்து பாலூட்டுவது குழந்தைக்கு மிகவும் ஆதரவான நிலையாக இருக்கும்.
குழந்தை பால் குடிக்க நன்கு பழகிய பிறகு தாயும் குழந்தையும் படுத்துக்கொண்டு பாலூட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம். குழந்தைக்கு எந்த நிலை அதிக வசதியாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த வழியில் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
தாய்க்கு முதன்முதலில் தாய்ப்பால் கொடுப்பதற்கு சங்கடமும், கூச்சமும் இருக்கவே செய்யும். அதனால் தாயையும் குழந்தையையும் தனியே விடுவது நல்லது. ஒவ்வொரு முறை பால் கொடுத்தபிறகும் மார்பகத்தை சுத்தப்படுத்த வேண்டும், அப்போதுதான் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.