அதிநவீன ப்ளூடூத் இயர்போன் விலை இவ்வளவு தானா? அதகளப்படுத்தும் Xiomi !

அதிநவீன ப்ளூடூத் இயர்போன் விலை இவ்வளவு தானா? அதகளப்படுத்தும் Xiomi !

குறைந்த விலையில் மிகுந்த தரத்துடன் மொபைல் போனை வெளியிடுவதில் இந்நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது இந்த வரிசையில் தற்போது ப்ளூடூத் இயர்போன் இடம் பெற்றுள்ளது.


இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போனினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் என  பெயரிடப்பட்டுள்ளது.


இதில் பல்வேறு சிறப்புஅம்சங்களுடன் கூடிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இது  IPX4 தரச்சான்று பெற்றுள்ளது.  இதில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப் வடிவமைப்பு உள்ளது. இதை 360 டிகிரி கோணத்திலும் சுழற்ற முடியும்.  120 எம்..ஹெச். பேட்டரியும் கொண்டுள்ளது.


மேலும் இதில் பேஸ் ரெஸ்பான்ஸ் (Face Response) மற்றும் கூகுள் அசிஸ்டண்ட்(Google Assistant) வசதி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் இந்த இயர் போனெனின் விலை ரூ.1499 ஆக நிர்ணயித்துள்ளது

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?