ஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ பயன்கள்! சிறியவர் பெரியவரென அனைவருக்கும் பல நோய்களிலிருந்து தீர்வு!

ஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ பயன்கள்! சிறியவர் பெரியவரென அனைவருக்கும் பல நோய்களிலிருந்து தீர்வு!

தற்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. இதன் இலைகள், பூக்கள், வேர்கள் என் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயனாகின்றன. நெஞ்சில் கபம் சேர்ந்து கோழை வெளிவராமல் மூச்சு திணறல்கள், இருமல் போன்ற நுரையீரல் நோய்கள் தீர, இந்த இலைகளை பறித்துக் கழுவி தண்ணீர் விடாமல் இடித்து சாறெடுக்கவும்.

சிறியவர்களுக்கு 3 முதல் 5 துளிகளும், பெரியவர்களுக்கு 10 முதல் 15 துளிகளும் தேன் கலந்து கொடுக்கலாம். ” இவைகளிலிருந்து சாறு, பசை அல்லது பொடி செய்து, பின் இதில் எதாவது ஒன்றை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அத்துடன் அரை ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து தினமும் மூன்று வேளை என ஒரு வாரம் பருகி வந்தால் தொடர் இருமல் தீரும்

* சுமார் 5, 6 இலைகளைப் பறித்துக் கழுவி பொடியாக்கி ஒரு கப் நீரில் 15 நிமிடம் வரை கொதிக்க வைத்து வடிகட்டி, இக்கஷாயத்தை காலை, மாலை என மூன்று நாட்கள் பருகினால் காய்ச்சல் நீங்கும். *குரல் இனிமை பெற இதன் இலையில் இரண்டு மிளகு வைத்து நன்றாக மென்று சாறைத் தொண்டையில் நன்கு படும்படி விழுங்க வேண்டும்.

* கிராமங்களில் இந்த இலையை நிழலில் உலர்த்தி சுருட்டு போல செய்து புகைப்பார்கள். இந்தப் புகையை உள்ளுக்குள் நன்றாக இழுத்து நுரையீரலில் படரவிட்டால் ஆஸ்த்துமா விலகி குணம் அடையலாம்.* இதன் இலைச் சாறுடன் தேன் கலந்து தொடர்ந்து அருந்தி வர இரத்தக் கொதிப்பு குறையும். காமாலை நோய் குணமாகும்.

* இந்த இலைச் சாறுடன் திப்பிலி, ஏலக்காய், அதிமதுரம் தாளிசபத்திரி ஆகியவை சேர்த்து குடிநீரிலிட்டு பருகி வர இருமல், இளைப்பு, சுரம் நீங்கும். இந்த இலையில் இருக்கும் வாசிசின் என்ற வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து, நுரையீரவை விரியச்செய்வதால் சளி, ஆஸ்த்துமா போன்றவை குணமாகின்றன.

* கண் எரிச்சல் குணமாக இந்த இலைகளை சாறெடுத்து காலை, மாலை மற்றும் இரவு உறங்கப் போகும் முன்னர் கால் பாதங்களில் பூசி வர வேண்டும். * இதன் வெண்மையான பூக்களை வதக்கி, ஆறியபின் வெதுவெதுப்பான சூட்டில் கண்களின் மேல் வைத்துக் கட்டினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகின்றன.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்