மாதவிடாய் நாட்களின் குழப்பத்துக்கும் கர்ப்பத்திற்கும் தொடர்பு உண்டா?

மாதவிடாய் நாட்களின் குழப்பத்துக்கும் கர்ப்பத்திற்கும் தொடர்பு உண்டா?

மாதவிடாய் ஏற்படத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் உடலின் ஹார்மோன்கள் குழப்ப நிலையிலே இருக்கும். அதனால் கரு முட்டை வெளியேற்ற தாமதமாகலாம்.மனக் கவலை, கடுமையான காய்ச்சல், விரதம் போன்றவை காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிப்பு அடையலாம்.

கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஹார்மோன் சமநிலை குறையலாம். அதனால் மாத்திரை நிறுத்தும்போதும் மீண்டும் தொடங்கும்போதும் மாதவிடாய் குளறுபடி ஏற்படலாம்.

மாதவிடாய் தவறினாலே கர்ப்பம் என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடல் பேசும் மொழியை அறிந்துகொள்பவர்களால், மாதவிடாய் காலத்தை எளிதில் அறிந்துகொள்ள முடியும். தொடர்ந்து மாதவிடாய் காலத்தில் குழப்பம் நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்