கர்ப்பகால நீரிழிவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

கர்ப்பகால நீரிழிவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

·        
கர்ப்பிணிக்கு நீரிழிவு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும், சாப்பிடவேண்டிய உணவு வகைகளையும் விலக்கவேண்டிய உணவுகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார்.

·        
ஒருசில கர்ப்பிணிகளுக்கு பிரசவம் வரையிலும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் நேரலாம். சிலருக்கு மாத்திரைகள் தேவையாக இருக்கும்.

·        
நீரிழிவை கட்டுப்படுத்துவதற்காக யோகா, நடைபயிற்சி போன்ற ஒருசில பயிற்சி முறைகளை செய்யுமாறு மருத்துவர் பரிந்துரை செய்யலாம்.

·        
ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணிப்பதற்கான சாதனம் உங்களுக்குத் தேவையா என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார்.

திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் அல்லது அதிகரித்தால் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும் என்பதையும், உடன்டியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது கர்ப்பிணியின் கடமை. பெரும்பாலும் உணவுக் கட்டுப்பாடே கர்ப்பகால நீரிழிவை கட்டுப்படுத்த போதுமானது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்