• அறுவை சிகிச்சையை கடைசி வாய்ப்பாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதால் உணவு, பயிற்சி மற்றும் தேவையெனில் மாத்திரை, மருந்துகள் மூலம் உடலை குறைக்கவே அதிகபட்சமாக முயற்சிக்க வேண்டும்.
• பாரியாட்ரிக் சர்ஜரி மூலம் குடல் அளவு குறைக்கப்படுவதால், உடல் எடை மளமளவென குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
• லிப்போசக்ஷன் முறையில் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதும் உடல் பருமனை குறைப்பதில் பயனளிக்கிறது.
• குடல் வெட்டி அகற்றப்படாமல் ரப்பர் பேன்ட் போடுவதும் நடைமுறையில் இருக்கிறது.
இதுதவிர இரைப்பையின் ஒரு பகுதியை அகற்றுவதும் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. இப்போது இந்த சிகிச்சைகள் லாப்ராஸ்கோபி முறையில் செய்யப்பட்டாலும், அறுவை சிகிச்சையின்றி உடல் பருமனை குறைப்பதே நல்லது.