• கர்ப்பிணி என்றாலே மாங்காய் சாப்பிடவேண்டும் என்று சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது.
• பொதுவாகவே உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும்போது, பற்றாக்குறையாக இருக்கும் சத்து எதில் கிடைக்கும் என்று தேடிப்பிடித்து எடுத்துக்கொள்வது உடம்பின் தன்மை.
• அந்த வகையில் கர்ப்பிணிக்கு உடலில் தாது உப்புக்கள் குறிப்பாக சோடியம் தட்டுப்பாடு ஏற்படும்போது மாங்காய் மீது ஆர்வமும் ஆசையும் உண்டாகிறது.
• ஆரோக்கியமான பெண்ணாக இருந்தாலும் கர்ப்பம் அடையும்போது, 20 சதவிகித ரத்தவோட்டம் அதிகரிப்பதால் கனிமம், தனிமம் மற்றும் தாது உப்புகளின் தேவை அதிகரிக்கிறது.
தேவைப்படும் சத்துக்களை பல்வேறு உணவுகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் மாங்காய் சாப்பிட்டால்தான் கர்ப்பிணி என்று அர்த்தம் அல்ல. அதேபோல் கர்ப்பிணிக்கு ஐஸ்க்ரீம் மீது ஆசை அதிகமாக இருக்கும் என்பதும் உடல் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட விஷயம்தான்.