கர்ப்பிணிகளே இது உண்மையா இல்ல மூட நம்பிக்கையா ?? முதல் குழந்தை எப்போதும் தாமதமாகத்தான் பிறக்குமா?

கர்ப்பிணிகளே இது உண்மையா இல்ல மூட நம்பிக்கையா ?? முதல் குழந்தை எப்போதும் தாமதமாகத்தான் பிறக்குமா?

• பொதுவாகவே பிரசவங்களில் 35%, மருத்துவர்கள் குறிப்பிடும் நாட்களுக்கு முன்னதாகவே நடக்கிறது. 5% பிரசவம் மட்டும் சரியான நாட்களில் நடக்கிறது.

• 60% பிரசவம் மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குப் பிறகே நடக்கிறது. மாதவிலக்கு சுழற்சியை பெரும்பாலான பெண்கள் துல்லியமாக கணக்கிட்டு சொல்வதில்லை என்பதுதான் இதற்கு காரணம்.

• மிகச்சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு பிரசவம் சரியான நாட்களில் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு.

• 28 நாட்களைத் தாண்டிய மாதவிலக்கு உள்ள பெண்களுக்கு தாமதமாகவும், 28 நாட்களுக்கு உட்பட்டு மாதவிலக்கு வரும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரும் பிரசவம் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மேலும் கர்ப்பகாலத்தில் கருவின் வளர்ச்சி, கர்ப்பிணியின் மனநிலை, கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொள்ளும் சத்துணவு போன்றவையும் பிரசவத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. அதனால் தலைபிரசவத்தில் மட்டும்தான் பிரசவம் தாமதமாகத்தான் நிகழும் என்பது முழு உண்மை கிடையாது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!