இந்திய ராணுவத்தில் ஓரினச்சேர்க்கை! ராணுவத் தளபதி பதில்!

இந்திய ராணுவத்தில் ஓரினச்சேர்க்கை! ராணுவத் தளபதி பதில்!

   ஆண்டுதோறும் அவர் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அதேபோல் வியாழக்கிழமை அன்று டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சீனா பாகிஸ்தான் உடனான எல்லை சூழலை இந்தியா மிகவும் சிறப்பாக கையாண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர் காஷ்மீர் பிரச்சனையும் எடுத்துரைத்தார்.
   காஷ்மீர் பிரச்சனையானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஆனது என்று கூறிய அவர் இதில் மூன்றாம் நபர் தலையிடக்கூடாது என்று கூறினார். வன்முறை துப்பாக்கி அனைத்தையும் விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தார். தீவிரவாதிகள் யார் மக்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் மிகுந்ததாக இருப்பதாக பிபின் ராவத் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தில் ஒரு சிலர் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறிய பிபின் ராவத். 
வேற்றுமையை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தெரிவித்தார். அப்போது ஓரினச்சேர்க்கை ராணுவத்தில் அனுமதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த பிபின் ராவத் இந்திய ராணுவம் பழமையான ஒன்று எனத் தெரிவித்தார். எனவே இதில் ஓரினச்சேர்க்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். 
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதை ராணுவத்தில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்